ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அடுத்த மாதம் டில்லி செல்வதற்கு முன்னரே, மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் என்ற வாக்குறுதியை கொழும்பிடமிருந்து டில்லி எதிர்பார்கின்றது என இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
இந்தியத் தரப்பால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிறுவுநர் பஸில் ராஜபக்சவுக்கும் இது தொடர்பில் தெரியப்படுத்தப்பட்டுள்ளது எனக் கூறப்படுகின்றது.
இதையடுத்தே பஸில் ராஜபக்ச ‘மொட்டு’வின் மாகாண சபை முன்னாள் உறுப்பினர்களை பத்திரமுல்லை காரியாலயத்துக்கு அழைத்து இது தொடர்பில் பேசியுள்ளார்.
மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு ரணிலுக்கு இந்தியா அழுத்தம் கொடுக்கவுள்ளது. அது தொடர்பான நிபந்தனைக்கு அவர் இந்தியா செல்லும் முன்பே உடன்பட வேண்டி வரும். இந்தியா இதையே எதிர்பார்க்கின்றது என்று பஸில் கூறியுள்ளார்.
உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்குப் பணம் இல்லை என்று கூறி வரும் ரணில் அரசு இதே காரணத்தை இந்தியாவிடம் கூறி மாகாண சபைத் தேர்தலை நடத்தாமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.










