மாடி வீட்டில் தீ பரவல் – இருவர் பலி!

கம்பஹா மாவட்டத்துக்குட்பட்ட கடவத்த, எல்தெனிய பகுதியிலுள்ள இருமாடி வீடொன்றில் இன்று அதிகாலை ஏற்பட்ட திடீர் தீ பரவலில் இருர் உயிரிழந்துள்ளனர்.

53 மற்றும் 57 வயதான தம்பதியினரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

தீ பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

தீ பரவல் சம்பவம் தொடர்பில் களனி குற்றத் தடுப்பு பிரிவினர் ,கடவத்த பொலிஸார் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

Related Articles

Latest Articles