மாட்டை களவாடி – கொம்பை வெட்டி நிறத்தை மாற்றியவர் கைது – திருமலையில் சினிமா பாணியில் சம்பவம்

திருகோணமலை, கம்பகொட்ட பகுதியில் மாட்டை களவாடி, அதனை நிறம்மாற்றி பராமரித்து வந்த நபரொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நொச்சிக்குளம், ஜின்னாநகர் வயல் பகுதியில் மேய்ச்சலுக்காக கட்டி வைக்கப்பட்டிருந்த மாட்டை திருட்டுத்தனமாக கொண்டு சென்று மாட்டின் கொம்புகளை வெட்டி, வெள்ளை நிறத்தில் காணப்பட்ட மாட்டுக்கு நிறம் பூசி பராமரித்து வந்த நிலையிலேயே, மாடு அடையாளம் காணப்பட்டுள்ளது.

கடந்த ஒரு மாதமாக காணாமல் போன மாட்டை தேடி மாட்டு உரிமையாளர் அருகிலுள்ள கிராமத்திற்கு சென்ற போது நபரொருவர் மாடு வாங்கி வளர்த்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதனை அடுத்து குறித்த மாட்டை பார்வையிட்டபோது மாட்டின் இரு கொம்புகளும் வெட்டப்பட்ட நிலையில் மாட்டிற்கு நிறம் பூசப்பட்டுள்ள சம்பவம் தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் மாட்டின் உரிமையாளர் மொரவெவ பொலிஸ் நிலையத்திற்கு தெரியப்படுத்தியபோது மாட்டை பராமரித்து வந்தவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட போது மாட்டை திருடி நிறம் பூசி வளர்த்து வந்தமை தெரிய வந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர் மஹதிவுல்வெவ, கம்பகொட்ட பகுதியில் வசித்து வரும் ஏ.எம்.மதுசங்க பண்டார (23வயது) என பொலிஸார் தெரிவித்தனர்.

Related Articles

Latest Articles