மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாமிமலை ஸ்டஸ்பீ தோட்டத்தில் அவரவத்தை பிரிவில் இன்று (28) காலை 6 மணியளவில் புல் அறுக்கச்சென்ற இளம் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
25 வயதுடைய முனியாண்டி சதிஸ் என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நீண்டநேரம் ஆகியும் இவர் வீடு திரும்பாததால் உறவினர்களும், பிரதேச வாசிகளும் தேடுதல் நடத்தியுள்ளனர். இதன்போதே அவர் ஆறொன்றில் சடலமாக மிதப்பதை கண்டுள்ளனர். இது தொடர்பில் மஸ்கெலியா பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் ஸ்தல விசாரணையை முன்னெடுத்தனர். சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
மஸ்கெலியா நிருபர் – பெருமாள்
