அடுத்த பாடசாலை தவணைக்கு மாணவர்களுக்குத் தேவையான உயர்தர பயிற்சிப் புத்தகங்கள் நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட லங்கா சதொச விற்பனை நிலையங்களில் கிடைக்கும்.
அரச அச்சகக் கூட்டுத்தாபனத்தினால் அச்சிடப்பட்ட பயிற்சிப் புத்தகங்களை 48 விற்பனை நிலையங்களில் கொள்வனவு செய்ய முடியும் என லங்கா சதொச விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு சலுகை விலையில் புத்தகங்கள் விற்பனை செய்யப்படும் என லங்கா சதொச தெரிவித்துள்ளது.