மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் நோர்வூட் பொலிஸாரால் கைது!

நோர்வூட், கெசல்கமுவ ஒயாவில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட மூவரை நோர்வூட் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இன்று மதியமே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நோர்வூட் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமையயே குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

மாணிக்கக்கல் அகழ்வுக்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர்கள் கம்பளை.பொகவந்தலாவ. எம்பிலிபிட்டிய ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களாவர்.

எஸ்.சதீஸ்

 

Related Articles

Latest Articles