மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட நால்வர் கைது

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொகவந்தலாவை எலிப்படை 12 ஆம் இலக்க தேயிலைமலை காணியில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  ஒருவர் தப்பியோடியுள்ளார்.

இன்று முற்பகல்வேளையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று ஹட்டன் குற்றப்பிரிவிற்கு பொறுப்பான பிரதான பொலிஸ் பரிசோதகரும், பொறுப்பதிகாரியுமான பிரேமலால் தெரிவித்தார்.

சந்தேக நபர்கள் மாணிக்கக்கல் அகழ்விற்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

பொகவந்தலாவை நிருபர் – சதீஸ்

Related Articles

Latest Articles