கண்டி – வத்தேகமவில் இருந்து அனுராதபுரம் நோக்கி யாத்திரைக்கு சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்று பஸ்ஸுடன் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர்.
வத்தேகம பிரதேசத்தைச் சேர்ந்த சேர்ந்த தாய், தந்தை, மகன், மகள் ஆகியோர் முச்சக்கர வண்டியில் அனுராதபுரம் நோக்கிச் சென்ற போது, மாத்தளை பலாபத்வளை பிரதேசத்தில் வைத்து கண்டி நோக்கி வந்து கொண்டிருந்த பஸ் வண்டி ஒன்றுடன் இருக்கும் நேர் மோதி உள்ளது.
இதன்போது முச்சக்கர வண்டியில் பயணித்த தாய் தம்மிகா பத்மினி (54) மற்றும் மகள் சசினி தாரக (17 வயது) உயிரிழந்ததுடன்,
முச்சக்கர வண்டியை ஓட்டிச் சென்ற மகன் மற்றும் தந்தை காயங்களுடன் மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
