மாத்தளையில் விபச்சார விடுதி முற்றுகை – நால்வர் கைது!

மாத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொடகமுவ பகுதியில் சட்டவிரோதமாக இயங்கி வந்த விபசார விடுதியொன்றை பொலிஸார் முற்றுகையிட்டனர். மேலும் அங்கிருந்து இரண்டு பெண்கள் உட்பட நால்வரை சந்தேகத்தின் பேரில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர்கள் குருநாகல் வாரியபொல ஹிக்கடுவ பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

விடுதி முகாமையாளர் உட்பட நான்கு சந்தேக நபர்களையும் மாத்தளை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜகத் பண்டார தெரிவித்தார்.

Related Articles

Latest Articles