மாத்தளை பிரிதவளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் சிவலிங்க சன்னிதான மகா கும்பாபிஷேக பெருவிழா 09/09/ 2022 வெள்ளிக்கிழமை முற்பகல் 09.05 முதல் 10 .20 வரையிலான சுப வேளையில் இடம்பெறும். பூர்வாங்க கிரியைகள் யாழ் வண்ணையூர் சிவாகம கிரியா ரத்தினம், சிவ ஸ்ரீ ராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா தலைமையில் இடம்பெறும். சர்வசாதக ஆச்சாரியார் சிவஸ்ரீ எஸ்.தர்சகசர்மா ஆலய ஆதீன கர்த்தா சிவ ஸ்ரீ ராஜ குருக்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளார்கள்.
புதன்கிழமை மாலை 6 மணி அளவில் விநாயகர் வழிபாட்டுடன் கிரியைகள் ஆரம்பமாகி தீப ஸ்தாபனம், யந்திர ஸ்தாபனம், விம்ப ஸ்தாபனம், அஸ்டபந்தனம் இடம்பெறும். வியாழக்கிழமை எண்ணைக் காப்பு, யாகபூஜை, விம்ப சுத்தி, ரக்ஷாபந்தன், நியாசம் பரிசாகுதி என்பன இடம்பெறும் .
வெள்ளிக்கிழமை காலை 09.05 முதல் 10.20 வரையிலான சுபவேளையில் குடமுழுக்கு இடம்பெறுவதோடு பால்குட பவனியும் இடம்பெறும் .










