மாத்தளை மாவட்டத்தில் சட்டவிரோதமாக 200 துப்பாக்கிகள்!

மாத்தளை மாவட்டத்தில் பதிவு செய்யப்படாமல் விவசாயிகளிடம் உள்ள துப்பாக்கிகள் தொடர்பான விபரங்களை திரட்டுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட செயலாளர் கே.பெரேரா சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

மாத்தளை மாவட்டத்தில் விவசாய குழு கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மாவட்ட செயலாளர் இத்தகவலை தெரிவித்தார்.

விவசாய நடவடிக்கைகளுக்காக விவசாயிகள் பயன்படுத்தி வரும் துப்பாக்கிகளில் பல இதுவரை பதிவு செய்யப்படாமல் உள்ளதாக தெரியவந்துள்ளது. இம்மாவட்டத்தில் பதிவு செய்யப்படாத சுமார் 200 துப்பாக்கிகள் லக்கல பிரதேசத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

பதிவு செய்யப்படாமல் துப்பாக்கிகளை பயன்படுத்துவது சட்டவிரோத செயலாகும். எனவே பதிவு செய்யப்படாத துப்பாக்கிகளை தேடி கண்டுபிடித்து அதனை பதிவு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அவர் இக்கூட்டத்தில் தெரிவித்தார்.

Related Articles

Latest Articles