” சிறப்புரிமைகளை பெறுவதற்காக நான் ஆளுநர் பதவியை ஏற்கவில்லை. சப்ரகமுவ மாகாண மக்களுக்கு சேவையாற்றுவதே எனது நோக்கம். எனவே, எனது மாத சம்பளத்தை கல்விக்காக வழங்குகின்றேன். “
இவ்வாறு சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.
” எனது சம்பளம் கல்வி அமைச்சுக்கு வழங்கப்படும். அதன்மூலம் கேகாலை, இரத்தினபுரி பகுதியில் உள்ள மாணவர்களுக்கு கொப்பி, புத்தகம் உள்ளிட்டவற்றை வாங்குவதற்கு அது பயன்படுத்தப்படும்.” – எனவும் நவீன் குறிப்பிட்டார்.










