மாமியாரை அடித்துக்கொலை செய்த மருமகன்!

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள வாகனேரி பிரதேசத்தில் மருமகன் மாமியாரை அடித்துக் கொலை செய்துவிட்டுத் தப்பி ஓடிய சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்தனர்.

வாகனேரி கூளையடிச்சேனையைச் சேர்ந்த 45 வயது டைய வைரமுத்து கோமதனி என்பவரே இவ்வாறு உயிரி ழந்துள்ளார். இவரின் மகள் திருமணம் முடித்து இரு குழந்தைகள் உள்ள நிலையில் தொழில் வாய்ப்புக்காக வெளிநாடு சென்றுள்ளார். அவரது தாயாருடன் குழந்தைகள் மற்றும் அவரது கணவன் வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் மருமகன் மதுபோதையில் மாமியாருடன் தினமும் சண்டையிட்டு வந்தார் எனக் கூறப்பட்டது. சம்பவதி னமான நேற்று இரவும் மாமியார் வீட்டில் தனிமையில் இரந்துள்ளபோது மது போதையில் வந்த மருமகனுக்கும் மாமியாருக்கும் இடையே சண்டை ஏற்பட்டது.

மாமியாரின் தலை மீது பாரிய பொருள் ஒன்றால் தாக்கியதையடுத்து அவர் உயிரிழந்தார். 30 வயதுடைய மருமகன் அங்கி ருந்து தப்பி ஓடியுள்ளார் எனப் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அயவர்கள் பொலிஸாருக்குத் தகவல் தெரிவித்தமை யையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தமையுடன் நீதிமன்ற அனு மதியைப் பெற்று சடலத்தை பிரேத பரிசோதனைக்கு வைத் தியசாலையில் ஓப்படைப்பதற்கான நடவடிக்கைகளை மேற் கொண்டிருந்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச் சேனை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles