மாயமான 4 மலையக மாணவர்கள் ராகமயில் மீட்பு!

நோர்வூட் வென்சர் தோட்டத்தில் வசிக்கும் நான்கு பாடசாலை மாணவர்கள் கடந்த 4 ஆம் திகதியிலிருந்து காணாமல்போயிருந்த நிலையில் ராகம பிரதேசத்தில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் இன்று தெரிவித்தனர்.

தரம் 10 இல் கல்வி கற்கும் 15 வயதுடைய நான்கு பாடசாலை மாணவர்களே இவ்வாறு காணாமல்போயிருந்தனர்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

இந்த மாணவர்கள் நால்வரும் கடந்த 4 ஆம் திகதி புதன்கிழமை வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ள நிலையில் மீண்டும் வீடு திரும்பாமல் இருந்துள்ளனர்.

பின்னர், காணாமல்போன மாணவர்களின் பெற்றோர்கள் இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளனர்.

இதனையடுத்து, பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் காணாமல்போன மாணவர்கள் நால்வரும் ராகம பிரதேசத்தில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

இந்த மாணவர்கள் நால்வரும் வேலைவாய்ப்பு தேடி ராகம பிரதேசத்துக்குச் சென்றுள்ளனர் என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, மாணவர்கள் நால்வரும் ராகம பொலிஸாரின் தலைமையில் அவர்களது பெற்றோர்களிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என்று நோர்வூட் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

மஸ்கெலியா நிருபர்.

Related Articles

Latest Articles