மாலைதீவில் தெருச்சண்டை போல அடித்து உருண்ட எம்பிக்கள்

மாலைதீவு நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சி எம்பிக்களுக்கும் எதிர்க்கட்சி எம்பிக்களுக்கும் இடையே கடும் மோதல் வெடித்தது.

நாடாளுமன்றத்திற்குள் வைத்தே இரு தரப்பினரும் ஒருவொருக்கொருவர் அடித்துக்கொண்ட காட்சிகள் வெளியாகியுள்ளன.

மாலைதீவு நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டம் நேற்று கூட்டப்பட்டது. அதிபர் முகம்மது முய்சுவில் புதிதாக 4 அமைச்சர்களுக்கு ஒப்புதல் பெறும் நோக்கத்தில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. ஆனால், அவை கூடியதும் அதிபர் முகம்மது முய்சுவுக்கு ஆதரவு கட்சிகளான மக்கள் தேசிய காங்கிரஸ் (PNC), மாலத்தீவு முற்போக்கு கட்சிக்கும் முன்னாள் அதிபர் முகம்மது சோலியின் மாலத்தீவு ஜனநாயக கட்சிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

மாலைதீவு நாடாளுமனறத்தில் எதிர்க்கட்சிக்கே பெரும்பான்மை உள்ளது. அமைச்சர்கள் சேர்க்கப்பட்டதற்கு நடைபெறும் வாக்கெடுப்பை நிறுத்தி வைக்க வேண்டும் என்று எதிர்கக்ட்சி கோரியது. இதனால், ஆளும் கட்சிக்கு எம்பிக்களுக்கும் எதிர்க்கட்சி எம்பிக்களுக்கும் கைகலைப்பு ஏற்பட்டது. தெருச்சண்டை போல மாலத்தீவு நாடாளுமன்றத்திற்குள் எம்பிக்கள் அடித்து உருண்டனர். சபாநாயகர் முன்பு இருந்த மைக்குகளையும் எம்பிக்கள் சிலர் பிடுங்கி எறிந்தனர். நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் அடித்துக் கொண்ட வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

Related Articles

Latest Articles