மாவட்டங்கள் கடந்த மனித நேயமிக்க பணிகள்

சபரகமுவ மாகாணத்தின் இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களில் வாழும் தென் மலையக மக்களின் கல்வி, சமூக, பொருளாதார அபிவிருத்தியை மேம்படுத்தும் முகமாக இரத்தினபுரியை தளமாக கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இரத்தினபுரி உதவும் கரங்கள் அமைப்பு மாவட்டங்கள் கடந்து மனித நேயம் மிக்க மக்கள் பணிகளை கடந்த இரண்டு வருட காலமாக பதுளை,.மாத்தளை, நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் வாழும் தனது மலையக உறவுகளுக்காக மேற்கொண்டு வருகின்றது.

 

அந்த வகையில் நுவரெலியா மாவட்டம் லிந்துலை நாகசேன பிரதேசத்தில் கடந்த ஒன்றரை வருட காலமாக பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டு எழும்பி நடக்க முடியாமல் வாழ்ந்துகொண்டிருக்கும் 74 வயதுடைய சிவனாண்டி கிருஷ்ணன், வட்டவளை லொனாக் தோட்டத்தில் வசிக்கும் 83 வயதுடைய முத்துசாமி மாரிமுத்து ஆகியோர்களுக்கு சக்கர நாற்காலி, மற்றும் உலர் உணவு பொருட்கள் என்பன வழங்கி வைக்கப்பட்டதுடன் நோர்வூட் மேல் பிரிவில் கடந்த 12வருட காலமாக நோய்வாய்ப்பட்டு எழும்பி நடக்க முடியாத நிலையில் உள்ள கணேசன் தனுஷாந்த் (வயது15) சிறுவனுக்கான ஊன்று கோல், உலர் உணவு பொருட்கள் என்பன அமைப்பின் நிர்வாக குழுவினர் மற்றும் இளைஞர் அணி உறுப்பினர்களால் வழங்கி வைக்கப்பட்டது.

ராமு தனராஜா

Related Articles

Latest Articles