மிகப்பெரிய கத்தரிக்காயை உற்பத்தி செய்து கின்னஸ் உலக சாதனை படைத்த விவசாயி!

 

அமெரிக்காவின் பிலடெல்பியா மாகாணம் ஹாரிசன் சிட்டியைச் சேர்ந்த விவசாயி எரிக் குன்ஸ்ட்ராம், 3 ஆண்டுகளுக்கு முன்பு தனது தோட்டத்தில் கத்தரிக்காய் செடி வைத்தார். இதில் இப்போது மிகப்பெரிய அளவிலான கத்தரிக்காய் விளைந்துள்ளது.

இந்த கத்தரிக்காயின் எடை 3.969 கிலோவாக இருந்தது. வழக்கமான கத்தரிக்காயைப் போல 12 மடங்கு பெரியதாக உள்ள இது கிட்டத்தட்ட வீட்டுப் பூனையின் அளவு ஆகும்.
இதுகுறித்து கின்னஸ் சாதனை நிறுவனத்துக்கு தகவல் தரப்பட்டது.

கடந்த ஆகஸ்ட் 19-ம் திகதி அந்நிறுவன அதிகாரிகள் அந்த கத்தரிக்காயை ஆய்வு செய்தனர். அதன் எடையை உறுதி செய்த அவர்கள் உலகின் மிகப்பெரிய கத்தரிக்காய் என அதை அங்கீகரித்தனர்.

இதையடுத்து, இது கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெறுகிறது. முன்னதாக, 3.778 கிலோ எடை கொண்ட கத்தரிக்காயை உலகின் மிகப்பெரியது என கின்னஸ் அமைப்பு அங்கீகரித்திருந்தது. அந்த சாதனை இப்போது முறியடிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து குன்ஸ்ட்ராம் கூறும்போது, “உலகிலேயே மிகப்பெரிய கத்தரிக்காயை நான் உற்பத்தி செய்தேன் என்பது எனக்கு பெருமையாக உள்ளது’’ என்றார்.

Related Articles

Latest Articles