மின்சாரத்தில் இயங்கும் வாகன பாவனை வேலைத்திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி

இலங்கைக்குள் மின்சாரத்தில் இயங்கும் வாகன பாவனையை ஊக்குவிக்கும் வகையிலான வேலைத்திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர முன்வைத்த யோசனைக்கு இவ்வாறு அனுமதி கிடைத்துள்ளது.

இதேவேளை, 2022ஆம் வருடம் தொடக்கம் நகர் பகுதிகளில் மின்சாரத்தில் இயங்கும் பஸ்கள் அறிமுகப்படுத்தவும் அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டார்.

தேசிய சுற்றுச்சூழல் சபையின் 14ஆவது அமர்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

Related Articles

Latest Articles