லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாமஸ்டன் தோட்டத்தில், மின்சாரம் தாக்கி ஆசிரியர் ஒருவர் இன்று காலை பலியாகியுள்ளார்.
பாமஸ்டன் தமிழ் வித்தியாலயத்தில் சேவையாற்றும் இரு பிள்ளைகளின் தந்தையொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இன்று காலை அவர் தனது வீட்டு தோட்டத்துக்கு சென்றுள்ளார். தோட்டத்திற்கு பாதுகாப்பு வேலி மற்றும் நீர் பாய்ச்சுவதற்காக பொருத்தப்பட்டிருந்த மின் இணைப்பில் ஏற்பட்டிருந்த கசிவினை அவதானிக்காது, கால் வைத்ததால் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் எனக் கூறப்படுகின்றது.
சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக லிந்துலை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
கௌசல்யா










