மட்டக்களப்பு, முனைக்காடு கிராமத் தில் இன்று புதன்கிழமை மின்சாரம் தாக்கி 16 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக் குட்பட்ட முனைக்காடு கிராமத்தில் அமைந் துள்ள நாகதம்பிரான் ஆலயத்தில் வருடாந்த அலங்கார உச்சவம் இடம்பெற்று வரும் நிலையில், ஆனி உத்தர நாளான இன்று அதிகாலை வேளை விசேட பூஜை இடம்பெற்றது.
இதன்போது, மேற்படி சிறுவன் பாம்புப் புற்றுக்குப் பாலூற்றி விட்டு அதனருகில் நின்றபோது அருகில் இருந்த மின் குமிழுக்கு இணைக்கப்பட்டிருந்த மின் வடத்தில் இருந்த மின் ஒழுக்கு காரணமாக சிறுவனுக்கு மின்சாரம் தாக்கிய நிலை யில் அந்தச் சிறுவன் உயிரிழந்துள்ளார்.
முனைக்காடு கிராமத்தைச் சேர்ந்த 16 வயதான சென்தில்குமரன் கியோபன் என்பவரே உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பில் சம்பவ இடத்துக்குச் சென்ற கொக்கட்டிச்சோலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். சடலம் மகிழடித்தீவு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.