மின்சாரம் தாக்கி முதியவர் பலி: வெதமுல்ல தோட்டத்தில் சோகம்!

கொத்மலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெதமுல்ல தோட்டத்தில் நேற்று (30) சனிக்கிழமை இரவு மின்சாரம் தாக்கி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த பகுதியில் மரக்கறி தோட்டத்தை காட்டு விலங்குகளிடமிருந்து பாதுகாப்பதற்காக பாதுகாப்பு வேலியில் இணைக்கப்பட்ட மின்சார இணைப்பில் இருந்து மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் அதே தோட்டத்தில் குரங்கு விரட்டும் தொழிலில் ஈடுபட்டு வந்தவர் எனவும் வழக்கம் போல் விவசாய காணிக்கு தொழிலுக்கு செல்லும்போது வழுக்கி மின்சார வேலியில் விழுந்து உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர் .

இந்த சம்பவத்தில் வெதமுல்ல தோட்டத்தைச் சேர்ந்த 67 வயதுயுடைய தங்கவேல் கிருஷ்ணராஜ் என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொத்மலை பொலிஸாருடன் நுவரெலியா தடயவியல் பொலிஸார் இணைந்து முன்னெடுத்துள்ளனர்.

Related Articles

Latest Articles