மின்சாரம் மற்றும் தண்ணீர் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்படவில்லை – என்று அமைச்சரவை இணைப்பேச்சாளரும், அமைச்சருமான ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு இன்று அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதன்போதே அமைச்சர் இந்த தகவலை வெளியிட்டார்.
” மின்சாரம் மற்றும் தண்ணீர் கட்டணங்களை அதிகரிப்பது தொடர்பில் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடப்படவில்ல. எனினும், ரயில் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது. “-எனவும் அமைச்சர் கூறினார்.
