மின்சார சபை ஊழியர்கள் போராட்டம் – சில பகுதிகளில் மின்தடை!

இலங்கை மின்சாரசபை ஊழியர்கள் மாபெரும் போராட்டமொன்றை முன்னெடுத்து வரும் நிலையில், சில இடங்களில் இன்று மின் விநியோகம் தடைபட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை ஊழியர் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் இணைப்பாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.

தாம் போராட்டத்தை முன்னெடுக்கும் போது விநியோகத் தடை ஏற்பட்டால் அதனை சரிசெய்யப் போவதில்லை என மின்சார சபை ஊழியர்கள் ஏற்கனவே அறிவித்திருந்தனர்.

இந்நிலையில் இலங்கை மின்சார சபை ஊழியர்கள் கொழும்பில் இன்று மாபெரும் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

அத்துடன், சில இடங்களில் மின் விநியோகத் தடை ஏற்பட்டுள்ளதாக தமக்குத் தகவல்கள் கிடைத்துள்ளதாக ரஞ்சன் ஜயலால் மேலும் தெரிவித்துள்ளார்.

நாட்டை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதற்கு எதிர்த்து மக்களும் வீதிகளில் இறங்கிப் போராட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை முன்வைத்துள்ளார்.

கெரவலப்பிட்டியவில் உள்ள யுகதானவி மின் உற்பத்தி நிலையம் தொடர்பாக அமெரிக்காவை தளமாகக் கொண்ட நியூ  போர்ட்ரஸ் எனர்ஜி இன்க் நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை கைவிடுமாறும் அதன் விவரங்களை வெளியிடுமாறும் தொழிற்சங்கங்கள் அரசாங்கத்தை வலியுறுத்தி வருகின்றன.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles