ஹாலிஎல, நெலுவ தோட்டத்தில் மின்னல் தாக்கி பெண் தொழிலாளி ஒருவர் பலியாகியுள்ளார்.
கடும் மழை காரணமாக கொழுந்து மடுவத்தில் நின்றுக்கொண்டிருந்தவேளையிலேயே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
மின்னல் தாக்கியதில் மேலும் ஐந்து பெண் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சகிகலா எனும் பெண் தொழிலாளியே மின்னல் தாக்கி உயிரிழந்தவராவார்.
சம்பவம் தொடர்பில் அட்டாம்பிட்டிய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.
