மின்வெட்டு இல்லை – அறிவிப்பு விடுத்தார் அமைச்சர்

மின் வெட்டு தொடர்பில் அரசு இன்னும் எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை. எனவே, இன்று முதல் மின் வெட்டு அமுலாகும் என வெளியாகும் தகவல்கள் தவறானவை – என்று மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

” நாட்டில் நாளொன்றுக்கு இரு மணிநேரம் மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு தற்போதைய சூழ்நிலையில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. தடையின்றி மின்சாரத்தை விநியோகிக்கவே எதிர்ப்பார்க்கின்றோம்.

எனினும், நெருக்கடியான சூழல் ஏற்பட்டால் என்ன செய்வது என்பது தொடர்பில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மின்சார கட்டணத்தை உயர்த்தவும் அரசு எதிர்ப்பார்க்கவில்லை. ” – என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles