கெரவலப்பிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையத்திற்கு தேவையான உலை எண்ணெய் கையிருப்பு வழங்கப்பட்டதன் பின்னர் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பித்துள்ளது.
இதன்மூலம் தேசிய மின் தொகுப்பில் 300 மெகாவாட் மின்சாரம் சேர்க்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
கெரவலப்பிட்டி யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தை மீண்டும் செயற்படுத்துவதன் மூலம் மின்வெட்டை நீடிக்காமல் இரண்டு மணித்தியாலங்கள் இருபது நிமிடங்களுக்கு மட்டுப்படுத்த அதிகாரிகளுக்கு இடமளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது..










