வரவு- செலவுத் திட்டத்தில் மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கான யோசனை எதுவும் இல்லை என்று எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று நடைபெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அத்துடன், சாதாரண மக்கள் மற்றும் சிறு அளவிலான வியாபாரிகளுக்கு நன்மை பயக்கும் திட்டங்கள் பட்ஜட்டில் உள்ளடக்கப்பட்டுள்ளன எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதேவேளை, மக்களுக்கு மென்மேலும் நெருக்கடிகளை கொடுக்காத வகையிலேயே பட்ஜட் முன்மொழிவுகள் இடம்பெற்றுள்ளன என்று அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.