இன்று முதல் அமுலுக்குவரும் வகையில் மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு பொது பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி மின் கட்டணம் 18 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளது. இவ்வருடத்தில் மின் கட்டண அதிகரிப்பு இடம்பெறும் 2ஆவது தடவை இதுவாகும்.
மின் கட்டண அதிகரிப்புக்கு பல தரப்பும் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.










