‘மின் வெட்டு இல்லை என்றது அரசு’ – ஆனால் இருளில் மூழ்கியன பல பகுதிகள்!

மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என அரசு அறிவிப்பு விடுத்திருந்தாலும், நாட்டில் பல பகுதிகளில் இன்று மாலை திடீர் மின்தடை ஏற்பட்டது.

7 மணி முதல் 8 மணிவரை கம்பளை பகுதியில் மின்வெட்டு அமுலில் இருந்தது.

அத்துடன், வத்தளை, கல்கிசை, இரத்மலானை, நுகேகொடை, அக்குரஸ்ஸ, பிபில, கெக்கிராவ, மாலபே பகுதிகளிலும் மின்விநியோகம் தடைபட்டுள்ளது.

மின்சார சபையின் தனியார் மின்னுற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே இவ்வாறு திடீர் மின்தடை ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles