மீண்டும் ஒரு முறை எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட இடமளிக்க போவதில்லை-முதித்த பீரிஸ்

நாட்டினுள் மீண்டும் ஒரு முறை எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட இடமளிக்க போவதில்லை என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் டிசம்பர் மாதம் முதலாம் திகதி முதல் வீட்டு பாவனை மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கான சமையல் எரிவாயு கொள்கலன்களை வழமைப்போல விநியோகிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் டிசம்பர் மாதம் முதலாம் திகதி முதல் சகல முகவரகங்களிலும் எரிபொருள் கொள்கலன்களை தட்டுப்பாடு இன்றி விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles