” தங்காலை கால்டன் இல்லத்தில் தற்போது தங்கியுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, கொழும்பில் மீண்டும் குடியேறுவதற்கு இதுவரையில் தீர்மானம் எதையும் எடுக்கவில்லை.” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
சந்திப்புகள் மற்றும் ஏனைய தேவைகளுக்காக கொழும்பு வர நேரிட்டல் அவர் வருவார், பிறகு ஊருக்கு திரும்புவார் எனவும் அவர் குறிப்பிட்டார்.