நாட்டில் நேற்றையதினம் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட எவருமே மரணிக்க வில்லை என அரசாங்கத் தகவல் திணைக்களம் அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொரோனா தொற்றுக்கு உள்ளான புதிய நபர்கள் 13 பேர், இன்று (16) இனங்காணப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்பிரகாரம் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 6,72,371 ஆகும்.
