ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து வெளியேறியவர்கள் மீண்டும் தாய்வீடு திரும்ப வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க.
அநுராதபுரம் பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட அனைத்து தரப்புகளுக்கும் அவர் இந்த அழைப்பை விடுத்தார்.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து தயாசிறி ஜயசேகர நீக்கப்படுவார் என தகவல் வெளியாகியுள்ள நிலையிலேயே, துமிந்த திஸாநாயக்க இந்த அழைப்பை விடுத்துள்ளார்.
சுதந்திரக்கட்சியின் தேசிய அமைப்பாளராக செயற்பட்டவர்தான் துமிந்த திஸாநாயக்க. எனினும், தயாசிறி உள்ளிட்ட தரப்புடன் ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாக அவர் பதவி விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.
