மீண்டும் நாடாளுமன்றம் வந்தார் ஜயந்த கெட்டகொட

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் ஜயந்த கெட்டகொட, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் இன்று நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது. இதன்போதே அவர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

நிதி அமைச்சராக செயற்பட்ட அஜித் நிவாட் கப்ரால், மத்திய வங்கி ஆளுநர் பதவியைப் பெறுவதற்காக அண்மையில் எம்.பி. பதவியை இராஜினாமா செய்தார். அதனால் ஏற்பட்ட வெற்றிடத்துக்கே ஜயந்த கெட்டகொட நியமிக்கப்பட்டுள்ளார்.

Related Articles

Latest Articles