ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்படவுள்ளார் என சிறிகொத்த வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
இது தொடர்பான உத்தியோகப்பூர்வ அறிவிப்பு இவ்வாரம் வெளியாகும் எனவும், எதிர்வரும் 22 ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினராக ரணில் விக்கிரமசிங்க சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளார் எனவும் அறியமுடிகின்றது.
நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி படுதோல்வியடைந்திருந்தாலும் அக்கட்சிக்கு தேசியப்பட்டியல் ஊடாக ஓர் ஆசனம் கிடைக்கப்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, நவீன் திஸாநாயக்க, ஜோன் அமரதுங்க ஆகிய இருவரில் ஒருவரை பாராளுமன்றம் அனுப்பவேண்டும் என்ற கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதால் இறுதி நேரத்தில் முடிவுகள் மாறக்கூடிய சாத்தியமும் இருக்கின்றது.