மீண்டும் வெற்றி வாகை சூடியது ஜப்னா கிங்ஸ்!

2024 லங்கா பிரீமியர் லீக் கிண்ணத்தை ஜப்னா கிங்ஸ் அணி சுவீகரித்துள்ளது.

கொழும்பு கெத்தாராம சர்வதேச மைதானத்தில் கோல் மார்வெல்ஸ் அணிக்கு எதிரானஇறுதிப் போட்டியில் 09 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்று ஜப்னா கிங்ஸ் அணி மீண்டும் கிண்ணத்தை வென்றுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற ஜப்னா கிங்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய கோல் மார்வெல்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட்டுக்களை இழந்து 184 ஓட்டங்களை பெற்றது.

அந்த அணி சார்பில் துடுப்பாட்டத்தில் Bhanuka Rajapaksa அதிகபட்சமாக 82 ஓட்டங்களை பெற்றதுடன், Tim Seifert 47 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பந்து வீச்சில் Asitha Fernando 03 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

இதன்படி 185 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஜப்னா கிங்ஸ் அணி 15.4 ஓவர்கள் நிறைவில் ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

அந்த அணி சார்பில் துடுப்பாட்டத்தில் Rilee Rossouw ஆட்டமிழக்காமல் அதிகபட்சமாக 106 ஓட்டங்களை பெற்றதுடன், அணித்தலைவர் Kusal Mendis ஆட்டமிழக்காமல் 72 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles