தொடர்ச்சியாக கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்களின் எண்ணிக்கையும் மரணங்களின் தொகையும் அதிகரித்து வருகின்ற நிலையில் பொதுமக்கள் மிகவும் கவனமாகவும் பொறுப்புடனும் செயற்பட வேண்டும் என சுகாதார அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.
குறிப்பாக திருமண வைபவங்கள், மரண நிகழ்வுகள் உள்ளிட்ட நிகழ்வுகள் காரணமாகவே வைரஸ் தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் சுகாதார வழிமுறைகளை முறையாக பின்பற்றாது மக்கள் அலட்சியம் காட்டி வருவதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த நிலை தொடருமானால் நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்றும் அதனால் மக்களே பல்வேறு பாதிப்புகளை எதிர்நோக்க வேண்டிவரும் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது
கடந்த இரண்டு தினங்களாக புதிய வைரஸ் தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை 700ஐத் தாண்டியுள்ள நிலையில் நேற்றைய தினம் அது 718 ஆக அதிகரித்துள்ளதாகவும் மரணங்களின் தொகை கடந்த 2 தினங்களாக இருபதைக் கடந்துள்ளதாகவும்அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
கடத்த வாரத்தோடு ஒப்பிடுகையில் இந்த வாரத்தில் கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை மற்றும் மரணங்களும் அதிகரித்துள்ளன.
அதற்கிணங்க நாட்டில் இதுவரை மொத்தமாக 5 லட்சத்து 49 ஆயிரத்து 500 கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ள நிலையில் அவர்களில் 5 லட்சத்து 23 ஆயிரத்து 503 பேர் பூரண குணமடைந்து ள்ளதாகவும் மேலும் 12,025 பேர் பல்வேறு ஆஸ்பத்திரிகள் மற்றும் சிகிச்சை நிலையங்களிலும் சிகிச்சை பெற்று வருவதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் மரணங்களை பொருத்தவரையில் கடந்த 13ஆம் திகதி 23 மரணங்கள் இடம்பெற்றுள்ள நிலையில் அதற்கு முன்தினம் இருபத்தி மூன்று மரணங்கள் இடம்பெற்றுள்ளதாகவும்
அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கிணங்க நாட்டில் இதுவரை குரு நான் வைரஸ் தொற்று காரணமாக 13, 972 பேர் மரணம டைந்துள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.