யாழ்ப்பாணம் கொழும்புத்துறை பகுதியில் இருந்து கடற்தொழிலுக்கு சென்றவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கொழும்புத்துறை உதயபுரம் பகுதியை சேர்ந்த அந்தோனிப்பிள்ளை டென்சில் ராஜேந்திரன் (வயது 53) என்பவரே உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் நேற்று திங்கட்கிழமை அவரது மகனுடன் தொழிலுக்கு சென்றவேளை கடலில் தவறி விழுந்து காணாமல் போன நிலையில், மீனவர்கள் தேடிவந்த நிலையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நெடுந்தீவு கடற்பரப்பில் கரையொதுங்கிய நிலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.