முடக்கப்பட்ட பூண்டுலோயா நகரில் சில வர்த்தக நிலையங்கள் திறப்பு!

பூண்டுலோயாவிலும் அதனை அண்மித்த பகுதிகளிலும் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவிவரும் சூழ்நிலையில், பூண்டுலோயா நகரை நேற்று முதல் ஒருவாரம் முடக்குவதற்கு வர்த்தக சங்கம் தீர்மானித்திருந்தது. இதன்படி வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருந்தாலும் ஒரு சில வர்த்தக நிலையங்கள் இன்றும் திறக்கப்பட்டிருப்பதை காணமுடிந்தது.

இது தவறான முன்னுதாரணமாக அமையும் எனவும், எனவே, வர்த்தக நிலையங்களைமூடி மக்களை பாதுகாப்பதற்கு அனைத்து வர்த்தகர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் வர்த்தக சங்கத்தின் தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நிருபர் – நீலமேகம் பிரசாந்த்

Related Articles

Latest Articles