நாடு இன்றிரவு 10 மணி முதல் எதிர்வரும் 30 ஆம் திகதிவரை முடக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானகையோடு, மலையக நகரங்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு பெருமளவு மக்கள் வருகை தந்தனர். தற்போதுகூட நகரப்பகுதிகள் பெரும் பரபரப்பாகவே காணப்படுகின்றது.
நகரங்களில் உள்ள சத்தோச நிலையங்கள் , வங்கிகள், சில்லறை வர்த்தக நிலையங்கள், மரக்கறி கடைகள் ஆகியவற்றில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அத்துடன், பெருமளவு வாகனங்களும் வருகை தந்திருந்தன. எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னால் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
கொவிட் தொற்று பரவல் மிகவும் வேகமாக பரவி வரும் நிலையில் சமூக இடைவெளிகளை மறந்த மக்கள் அவசர அவசரமாக பொருட்கள் கொள்வனவு செய்வதனை காணக்கூடியதாக இருந்தது.
கே. சுந்தரலிங்கம், ஹட்டன்
