தமிழ்க் கட்சிகளின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் இன்று முன்னெடுக்கப்படும் ஹர்த்தால் போராட்டத்திற்கு, யாழ்ப்பாண நகரில் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு வர்த்தகர்கள் பூரண ஆதரவை வழங்கியுள்ளர்.

இதனால் யாழ்ப்பாண நகரம் முற்றாக முடங்கியுள்ளது. தனியார் பேருந்து சேவை அனைத்தும் முடங்கியுள்ளன. இலங்கை போக்குவரத்து சபை பேருந்து அங்காங்கே சேவையில் ஈடுபடுவதை அவதானிக்க முடிகிறது.

தவணைப் பரீட்சைகள் காரணமாக
பாடசாலைகள் இயங்கி வருவதை அவதானிக்க முடிகிறது.
அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த பொது போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து சேவைகளும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன.
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியும் நீதவானாகவும் இருந்த சரவணராஜா, தனது நீதித்துறை கடமைகளை செய்த காரணத்தினால் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு பதவியிலிருந்து இராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேற நிர்பந்திக்கப்பட்டதை எதிர்த்து இன்று வெள்ளிக்கிழமை வடக்கு கிழக்கில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.










