வரவு – செலவுத் திட்ட கூட்டத்தொடர் நேற்றுடன் நிறைவுக்குவந்த நிலையில், நாடாளுமன்றம் 2024 ஜனவரி 9 ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதன்படி அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடர் 2024 ஜனவரி 9 ஆம் திகதி முற்பகல் 9.30 மணிக்கு ஆரம்பமாகும் என்று சபை முதல்வரும், அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் 2024 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் நவம்பர் 13 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.
நவம்பர் 14 ஆம் திகதி முதல் நவம்பர் (21) ஆம் திகதிவரை இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இடம்பெற்றது. நவம்பர் 22 ஆம் திகதி ஆம் திகதி முதல் குழுநிலை விவாதம் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று மாலை பாதீடுமீதான இறுதி வாக்கெடுப்பு நடைபெற்றது.
பாதீட்டு கூட்டத்தொடர் முடிவடைந்துள்ள நிலையில், இனி அடுத்த வருடம் ஜனவரி 9 ஆம் திகதியே சபை கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், நாடாளுமன்ற கூட்டத்தொடரை இரு வாரங்களுக்கு ஜனாதிபதி இடைநிறுத்துவார் என எதிர்பார்க்கபடுகின்றது.