ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசியிலிருந்து வெளியேறுவது தொடர்பில் தமது கட்சி இன்னும் எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினரான ஜொன்ஸ்டர் பெர்ணான்டோ தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அரசிலிருந்து வெளியேறவுள்ளது எனக் கூறப்படுவது போலியான தகவல். ஒரு சில தரப்பால் திட்டமிட்ட அடிப்படையில் உருவாக்கப்படும் செய்திகளே அவை. உரிய நேரத்தில் உரிய வகையிலேயே முடிவுகள் எடுக்கப்படும்.
உதயங்கவீரதுங்க எமது கட்சி உறுப்பினர் அல்ல, நாடாளுமன்றம் கலைக்கப்படும் என அவர் கூறினார். அது நடந்ததா? சமூக ஊடகங்கள் வியாபாரம் செய்வதால்தான் இப்படியான தகவல்கள் பரப்பட்டுவருகின்றன.” – என்றார்.