முட்டை விலையில் மீண்டும் மாற்றம் ஏற்படுமா?

முட்டை விற்பனைக்கான கட்டுப்பாட்டு விலை நிர்ணயம் செய்து வெளியிடப்பட்ட வர்த்தமானி எக்காரணம் கொண்டும் மாற்றப்பட மாட்டாது என வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

அமைச்சர் நளீன் ருவன்ஜிவ பெர்னாண்டோவின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், முட்டை உற்பத்தியாளர்களுடன் பலமுறை கலந்துரையாடியதன் பின்னர் அவர்கள் வழங்கிய எழுத்துமூல ஆவணத்தின் பிரகாரம் முட்டைக்கான கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.

65 ரூபாயாக அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்ட முட்டையின் விலை தற்போது 50 ரூபாய்க்கும் குறைந்த விலையில் வாடிக்கையாளருக்கு கிடைத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

அநியாயமாக முட்டை விற்பனை செய்தவர்களுக்கு எதிராக நுகர்வோர் அதிகாரசபை சட்ட நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் கோழி உற்பத்தியாளர்கள் மனித பாவனைக்காக அரிசியை கால்நடைத் தீவனமாக பயன்படுத்தினர், ஆனால் இனிமேல் கால்நடை தீவனத்திற்கு தேவையான சோளத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சர் இங்கு தெரிவித்தார்.

மேலும் கோதுமை மாவின் விலை, தட்டுப்பாடு தொடர்பில் இன்று தீர்மானம் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

பாணின் தற்போதைய விலை குறித்து இன்று பேக்கரி உரிமையாளர்களுடன் கலந்துரையாடவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

நுகர்வோருக்கு விற்கப்படும் கோதுமை மாவின் விலை தொடர்பில் உற்பத்தி நிறுவனங்களிடம் அறிக்கை கோரப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles