சந்தையில் முட்டையின் விலை வேகமாக அதிகரித்து வருவது தொடர்பில் விவசாய அமைச்சர் மற்றும் முட்டை உற்பத்தியாளர் சங்கங்களுக்கு இடையிலான கலந்துரையாடல் நேற்று காலை விவசாய அமைச்சில் இடம்பெற்றது.
இந்நிலையில் குறித்த கலந்துரையாடலில் எதிர்வரும் 29ஆம் திகதி முதல் நுகர்வோருக்கு 55 ரூபாவை விட குறைவான விலையில் முட்டையை வழங்க முட்டை உற்பத்தியாளர் சங்கங்கள் இணக்கம்மடைந்துள்ளதாக முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் பொருளாளர் விஜய அல்விஸ் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.