முதலில் பொதுத்தேர்தல் – மொட்டு கட்சி எம்.பி. கோரிக்கை

ஜனாதிபதி தேர்தலும், பொதுத்தேர்தலும் குறுகிய கால இடைவெளிக்குள் நடப்பதற்கான சாத்தியம் உள்ளது – என்று அரச பங்காளிக்கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட மொட்டு கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன கூறியவை வருமாறு,

“ பஸில் ராஜபக்ச வந்து முடிவுகளை எடுத்த பின்னர் முன்னோக்கி பயணிப்போம். ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பொதுத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு. எது எப்படி இருந்தாலும் ஜனாதிபதி மற்றும் பொதுத்தேர்தல் என்பன இவ்வருடத்துக்குள் நடத்தப்படும். இரு தேர்தல்களும் குறுகிய இடைவெளிக்கும் நடத்தப்படலாம்.” – என்றார்.

Related Articles

Latest Articles