முதல் டெஸ்டில் ஆஸி. அணி வெற்றி

இலங்கை, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் ஆஸி. அணி  வெற்றி பெற்றுள்ளது.

நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து களம் இறங்கியது. இதன்படி இலங்கை அணி 212 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

இலங்கை அணி சார்பாக நிரோஷன் திக்வெல்ல 58 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றார்.

ஆஸ்திரேலிய அணி சார்பில் நதன் லயன் 90 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.

அதனடிப்படையில் தமது முதல் இன்னிங்ஸை விளையாடிய அவுஸ்திரேலியா அணி சகல விக்கெட்களையும் இழந்து 321 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

துடுப்பாட்டத்தில் கெமரன் கிரீன் 77 ஓட்டங்களையும் உஸ்மான் கவாஜா 71 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொண்டனர்.

பந்துவீச்சில் இலங்கை அணி சார்ப்பில் ரமேஷ் மென்டிஸ் 4 விக்கெட்களையும், ஜெப்ரி வென்டர்சே மற்றும் அசித பெர்ணான்டோ ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தியிருந்தனர்.

தொடர்ந்து தமது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய இலங்கை அணி சகல விக்கெட்களையும் இழந்து 113 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

பந்துவீச்சில் நதன் லயன் மற்றும் ட்விஸ் ஹெட் ஆகியோர் தலா 4 விக்கெட்களை வீழ்த்தி இருந்தனர்.

அதனடிப்படையில் இரண்டாவது இன்னிங்ஸ் முடிவில் அவுஸ்திரேலியா அணிக்கு 5 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய ஆஸ்திரேலியா அணி விக்கெட் இழப்பின்றி 10 ஓட்டங்களை பெற்று போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles