நுவரெலியா – உடபுஸ்சல்லாவ பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த விபத்து சம்பவம் வெள்ளிக்கிழமை (06) பிற்பகல் 2:30 மணியளவில் நுவரெலியா உடபுஸ்சல்லாவ பிரதான வீதியில் விநாயகபுரம் ஆலயத்தை அண்மித்த சந்திக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் பொரலாந்த பகுதியை சேர்ந்த 80 வயதான முத்துசாமி மேரி என்பவரே படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
குறித்த விபத்து வீதியோரத்தில் முதியவர் கடந்து செல்ல முற்பட்டபோதே எதிரே வந்த கார் மோதியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
விபத்தை ஏற்படுத்திய காரை பறிமுதல் செய்து நுவரெலியா பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நானுஓயா நிருபர்










