ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் தவிசாளரும், முன்னாள் அமைச்சருமான காமினி ஜயவிக்கிரம பெரேரா இன்று (17) காலமானார்.
நோய்வாய்பட்டிருந்த அவர் உயிரிழக்கும்போது வயது 83.
ஜே.ஆர். ஜயவர்தன காலம்தொட்டே ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய செயற்பாட்டாளராக காமினி ஜயவிக்கிரம பெரேரா செயற்பட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியில் முக்கிய அமைச்சு பதவிகளை வகித்துள்ளார். கடைசியாக நல்லாட்சியிலும் அமைச்சு பதவியை வகித்தார்.
2020 பொதுத்தேர்தலில் அவர் போட்டியிடவில்லை.
