கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர (வயது – 65) இன்று காலமானார்.
தனியார் வைத்தியசாலையொன்றில் கடந்த சில நாட்களாக சிகிச்சைப்பெற்று வந்த நிலையிலேயே சிகிச்சைபலனின்றி உயிரிழந்துள்ளார்.
கடந்த பொதுத்தேர்தலில் அவர் போட்டியிடவில்லை. நாடாளுமன்ற அரசியலுக்கு விடைகொடுத்திருந்தார். ‘தூய தேசப்பற்றாளர்கள்’ எனும் சிவில் அமைப்பொன்றை உருவாக்கி அதன் ஊடாக செயற்பாடுகளை முன்னெடுத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.